ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மஹிந்த விளக்கம்!

0

ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பரவலை அலட்சியமாக எண்ண முடியாது. குறுகிய காலத்தில் உலகளாவிய ரீதியில் பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான நடவடிக்கைகள் நாடு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல காரணிகளை கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை இனி கடுமையாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் உற்பத்தி, மரகறிகள், பழங்கள் மற்றும் தேங்காய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் பொருள் விநியோகிக்க போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் எந்நிலையிலும் தடைகள் ஏற்பட கூடாது.

அத்துடன் மக்களும் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.