எதிர்வரும் காலம் ஆபத்தானவை! மக்களை தயார் நிலையில் இருக்குமாறு வேண்டுகோள்

0

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் கொவிட்-19 இன் பிற வைரஸ் வகைகள் தோன்றக்கூடிய ஆபத்துகள் காணப்படுவதாக  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஆகவே இதுபோன்ற சூழ்நிலைக்கு மக்கள் தயாராக இருப்பது முக்கியம்.

இலங்கையின் கொரோனா வைரஸ் நிலைமை மிக முக்கியமானதாகவுள்ளதுடன், அடுத்த இரண்டு வாரங்களில் நிலைமையை கட்டுப்படுத்துவது மிக முக்கியமானதாக இருக்கும்.

எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.