எதிர்வரும் நத்தார் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் தற்போதைய விலையை விட அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மக்களுக்கு தகுந்த முறையில் மரக்கறிகளின் தேவையை சந்தையில் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறி விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பண்டிகை காலத்திற்கு ஏற்ற வகையில், பயிரிடப்பட்டுள்ள கரட், கோவா, லீக்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல வகையான காய்கறிகளுக்கு இரசாயன உரங்களை பாவிக்காததன் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் பாரியளவில் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக நுவரெலியா பிரதேசத்தில் பல காய்கறி விவசாயிகள் காய்கறிச் செய்கையிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.