எனது நிவாரணப் பணிகள் தொடரும் – ரஞ்சன்

0

என்ன நடந்தாலும் சிறையில் இருந்து வந்த பின்னரும் இந்த நிவாரண பணிகளை தொடர்வேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட – கங்கொடவில நீதிவான் நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.

இதனை அடுத்து நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் இதுவரை 3000 கிலோ வரையில் அரிசி பகிர்ந்துள்ளேன். எனது அரிசி, மரக்கரி லொறிகள் மறிக்கப்பட்டுள்ளன. பொருட்களை பகிர்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. என்ன நடந்தாலும் நான் சிறையில் இருந்து வந்த பின்னரும் இந்த  நிவாரண பணிகளை தொடர்வேன்” என தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள், எதுவாக இருப்பினும் பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு செய்தமை தவறல்லவா? என கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‘ நான் இடையூறு செய்யவில்லை.  அங்கு வந்த நபர் எனது சாரதி. பொலிஸாரே எனது நிவாரண பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர்” என தெரிவித்தார்.