எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது என்கிறது அரசாங்கம்!

0

நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனவும், இதனால் அவற்றின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “மின்சார சபையைக் கொண்டு செல்வதலில் சிக்கல்கள் காணப்பட்டாலும், மின்சாரசபை நஷ்டத்தில் சென்றாலும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. அதேபோன்று எமது எதிர்பார்ப்பு 2023 ஆம் ஆண்டாகும் போதும் மின் கட்டணத்தை குறைப்பதே ஆகும்.

மேலும் பல மின் உற்பத்தி நிலையங்கள் எதிர்வரும் நாட்களில் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும். அவை நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் குறைந்த செலவில் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.

அத்தோடு நாட்டில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படாது. எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இவற்றின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது.

மக்கள் பாவனைக்கு தேவையான எரிவாயு, எரிபொருள் என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.