ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இத்தகவலை பொரளை பொலிஸார் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
கல்முனை பள்ளி வீதி பகுதியில் வசித்த மொஹம்மட் கலீன் என்பவரே உயிரிழந்துள்ளார்.