ஐரோப்பிய நாடுகளை விடவும் இலங்கையில் வேகமாக பரவும் கோவிட் பரவல்

0

ஐரோப்பிய நாடுகளில் பரவிய கோவிட் வைரஸ் மரபணுவை விடவும் இலங்கையில் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையின் திறனை மீறி நோயாளிகள் அடையாளம் காணப்பட்டால் பாரிய ஆபத்தான நிலைமை ஏற்பட கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் பரவல் அதிகரிக்க கூடும் பலர் அதில் பாதிக்கப்படுவதனை தடுத்து காப்பாற்றுவதற்கு மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய கொரோனாவை விடவும் வேகமாக இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் வைத்தியசாலை கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும். அவ்வாறு ஏற்பட்டால் கோவிட் தொற்று சமூகமயமாகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் நாட்டில் மிகப்பெரிய அனர்த்தம் ஏற்படும்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைவரும் மீளவும் 14 நாட்கள் தனிமைப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துபவர்கள் கடுமையான அவதானம் செலுத்தி பயனிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.