ஒருவரின் உயிரிழப்பு 2 ஆயிரத்து 800 பேரை முடக்கியது- மருதானையில் சில பகுதிகள் முடக்கம்!

0

மருதானையிலுள்ள இமாமுல் அரூஸ் மாவத்தையில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 819 பேரைக் கொண்ட பகுதி முடக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மருதானையினைச் சேர்ந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

இந்தநிலையில் கொரோனா தொற்று நோயாளி வசித்த பகுதி என்ற அடிப்படையிலேயே குறித்த வீதி முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மருதானையிலுள்ள ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் உள்ள இரண்டாயிரம் பேர் வசிக்கும் பகுதியும் இதே காரணத்தின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது.