காலி முகத்திடல் மக்கள் போராட்டம் தொடர்கிறது

0

எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 09ஆம் திகதி காலை முதல் கொழும்பு காலி முகத்திடலில் ஒன்றுகூடிய மக்கள் இன்று(12) நான்காவது நாளாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைக்கிடையே மழை பெய்து வருகின்ற போதிலும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கம் பதவி விலக ​வேண்டும் மற்றும் சூறையாடப்பட்ட பணத்தை மீள வழங்குமாறு கோரியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பலர் தாமாக முன்வந்து உணவு, குடிநீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.