கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.செல்வராஜா

0

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா விக்கிரமராட்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஆர்.விக்ரம செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன.