குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக சூரிய மின் தொகுதிகளை வழங்க திட்டம்

0

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக சூரிய மின் தொகுதிகளை வழங்குவதற்கு மின்சக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் ஒவ்வொரு குடும்பத்தை தெரிவுசெய்து, 14000 வீடுகளுக்கு 5 வாட் மற்றும் 10 வாட் மின்வலு கொண்ட சூரிய மின் தொகுதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.