குழந்தைகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்! – பெற்றோர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் DPRD பிரிவின் தலைவர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

கோவிட் பரவல் காரணமாக தற்போது கல்வி நடவடிக்கைகள் ஆன்லைனில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

இலங்கையில் அண்மையில் ஆன்லைன் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது எனவும், ஆன்லைன் கல்வி தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் போதுமான தரவு இல்லாததால், ஆன்லைன் கல்வி தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குழந்தைகள் மின்னணு சாதனங்களுடன் குழந்தைகள் செலவழிக்கும் நேரத்தை கண்காணிக்க வேண்டும்” என வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.