கொரோனா அச்சம் – 2 ஆயிரத்து 287 பேர் கண்காணிக்கப்படுகின்றனர்!

0

நாடளாவிய ரீதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் 2 ஆயிரத்து 287 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 212 பேர்  சிகிச்சைப் பெற்று வருவதாக விஷேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 16 தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கை தொடர்பிலான மருத்துவ கண்காணிப்பு முகாம்களில்  21 வெளிநாட்டவர்கள் உட்பட 2287 பேர் தற்போது கண்கானிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 19 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்களில் 18 பேர் இத்தலியிலிருந்து இருந்து வந்தவர்கள் எனவும் மற்றையவர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.