கொரோனா தடுப்பு மருந்து – 5 இலட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம்!

0

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு 5 இலட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம் என சுறா மீன் பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இந்த மருந்துக்கு சுறா மீனில் இருந்து எடுக்கப்படும், ஸ்குய்லின் எனப்படும் இயற்கை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது மற்ற மருந்துகள் தயாரிப்பதற்கும் இந்த எண்ணெய் துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த எண்ணெய்க்கு இயற்கையிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், மருந்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு டன் ஸ்குய்லின் எண்ணெய் எடுப்பதற்கு 3,000 சுறா மீன்கள் தேவைப்படுகின்றதாம்.

இது தொடர்பில் கலிபோர்னியாவில் இருக்கும் சுறா மீன் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில்,

”உலகம் முழுவதும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க 2,50,000 சுறா மீன்கள் தேவைப்படும். அதுவே, இரண்டு டோஸ்கள் கொடுக்க வேண்டும் என்றால், 5 இலட்சம் சுறா மீன்கள் தேவைப்படும் எனவும், கல்பர் மற்றும் பாஸ்கிங் சுறா மீன் வகைகளில் ஸ்குய்லின் எண்ணெய் அதிகளவில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

ஸ்குய்லின் எண்ணெய்க்காக கரும்பை புளிக்க வைத்து அதில் இருந்து சிந்தெடிக் முறையில் எண்ணெய் எடுக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

அத்தோடு, வருடந்தோறும் 30 இலட்சம் சுறா மீன்களை கொன்று அதில் இருந்து காஸ்மெடிக் மற்றும் இயந்திரங்களுக்கான எண்ணெய் எடுக்கப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.