கொரோனா தொற்றாளர்கள் வீட்டில் உயிரிழப்பதற்கான காரணத்தை வெளியிட்ட வைத்தியர்கள்

0

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் ஆயுள் காலத்தில் 10 வருடங்கள் குறைய கூடும் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானால் அவர்களின் ஆயுள் காலம் அவ்வாறு குறைய கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய 60 வயது கடந்தவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளில் உயிரிழப்பதற்கு கவனக்குறைவே முக்கிய காரணம் என வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.