கொரோனா தொற்றை சுயமாக கண்டறியும் நோக்கில் பொதுமக்களுக்கு உரிய உபகரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.
இதன் மூலம் கொரோனா தொற்று தொடர்பில் பொது மக்கள் தாமாகவே பரீட்ச்சித்துக்கொள்ள முடியுமென சுகாதார அமைச்சின் ஊக்குவிப்பு பணியகப் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த அவர் இன்று இடம்பெற்ற கொரோனா செயலணி கூட்டத்திலும் இந்த விடயம் ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் சுகாதார அமைச்சின் ஆய்வுக்கூடப்பிரிவும் கவனம் செலுத்துவதாக படுவந்துடாவ தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இந்த முறை செயற்படுத்தப்படுகிறது. இலங்கையிலும் இது செயற்படுத்தப்பட்டால் கொரோனா தொற்று தொடர்பில் பொதுமக்கள் நன்மைப்பெறுவர் என்றும் சுகாதார அமைச்சின் ஊக்குவிப்பு பணியகப் பணிப்பாளர் வைத்தியர் படுவந்துடாவ குறிப்பிட்டார்.