கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றப்போகும் இலங்கையரின் கண்டுபிடிப்பு!

0

டுபாயில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவரின் உடலில் இருக்கும் வைரஸை அழிக்க கூடிய CVDM எனப்படும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

டுபாய் நாட்டின் விமான மற்றும் மின்சார ரயில் பொறியியலாளராக செயற்படும் இலங்கையரான ஜீவனாந்த டி சில்வா என்பவரால் இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இயந்திரம் வைத்திய நிறுவனத்திடம் முன்வைத்து அதற்கு அனுமதி பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜீவனாந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் உடலில் இருக்கும் வைரஸ் 10 நொடி என்ற சிறிய காலப்பகுதியினுள் அழிந்து விட கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வெற்றிகரமான முடிவுகளை மேலும் வலுப்படுத்த தேவையான ஆய்வக வசதியை அரச மற்றும் தனியார் நிறுவனத்தின் தலையீட்டில் விரைவில் பெற்றுக் கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.

விரைவாக அதற்கான நடவடிக்கை செய்தால் ஆயிரக்கணக்கான உயிரை காப்பாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடலினுள் இருக்க கூடிய வைரஸ் தொற்றினை அழிக்க கூடிய இயந்திரம் ஒன்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்படுகின்றது.