கொரோனா விடயத்தில் கொழும்பு பாதுகாப்பானது என கருதவேண்டாம்!

0

கொரோனா தொற்று விடயத்தில் கொழும்பு தற்போது பாதுகாப்பானது என்று கருதவேண்டாம் என்று கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர அதிகார எல்லைக்குள் மொத்தம் 12,255 கொரோனா நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதில் கொழும்பு மாநகரசபையின் 292 ஊழியர்களும் அடங்குகின்றனர். நேற்று மாத்திரம் 950 பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டன.

அதில் இருபத்தைந்து பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர். மேலும் 600 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. எனவே கொழும்பு இப்போது பாதுகாப்பானது என்று ஒருபோதும் கருத வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸூக்கு முன்னர் இருந்ததைப் போன்று சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என்று நினைக்க வேண்டாம். இருப்பினும், கொரோனா வைரஸூடன் வாழ முடியும் என்றும் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.