கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய கிழக்கின் ஊடாக நாட்டுக்குள் பரவும் ஆபத்து

0

பிரி்த்தானியா மற்றும் ஆபிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய கிழக்கு ஊடாக இலங்கைக்குள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் நபர்கள் ஊடாக இந்த வைரஸ் திரிபு பரவக் கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் புதிய திரிபு சிங்கப்பூர், இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளதால், அது இலங்கைக்குள் பரவ கூடிய ஆபத்து இருப்பதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா வைரஸின் புதிய திரிபு தொடர்பான ஆய்வுகளை நடத்தக்கூடிய இயந்திரங்கள் சுகாதார அமைச்சரின் இரசாயனக் கூடத்தில் இல்லை என சுகாதார தொழில்சார் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த புதிய வைரஸ் திரிபை கண்டுபிடிப்பதற்கு இலங்கையிடம் போதுமான வசதிகள் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.