கொழும்பிலுள்ள போலியான யாசகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

0

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களில் யாசகர்களாக தோற்றமளிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ரயில்வே திணைக்களத்தின் கோரிக்கையின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களில் பிச்சை எடுக்கும் பல்வேறு நபர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

அவர்கள் யாசகர்களை போல் நடிக்கின்றனர். இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள நபர்கள் ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்படும்” என கூறியுள்ளார்.

இந்தச் செயலில் ஈடுபடும் நபர்கள் அந்தந்த ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் ரயில் டிக்கெட் அல்லது பாஸ் எடுத்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில், யாசகர்களை Vagrants கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம்” என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.