கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மரபண மாறியதாக சந்தேகிக்கப்படும் 14 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் டெல்டா மாறுபாடு பரவிய பிரதேசத்தில் 25 பேரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளில் மரபணு மாறியதாக சந்தேகிக்கப்படும் 14 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் மரபணு மாறியதில் டெல்டா மாறுபாடு இல்லை என்றால் வேறு மாறுபாடு உள்ளதா என்பதனை மரபணு வரிசைமுறை பகுப்பாய்வு மூலம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
இதுவரையில் இது தொடர்பிலான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்னபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
மரபணு மாறியதாக சந்தேகிக்கப்படும் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்ட கொழும்பு பிரதேசம் தொடர்பில் இதுவரையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்தில் பரவும் மாறுபாடு வேறு பிரதேசத்தை நோக்கி பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.