கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாது

0

 கோழி இறைச்சியின் விலையை அதிகரிப்பதற்கு வர்த்தகர்களுக்கு ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது என கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டைசார் தொழில் இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

கோழி உற்பத்திக்கான செலவை கட்டுப்படுத்துவது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீர்வை வரிகள் நீக்கப்பட்டு, பண்ணையாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதால், கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழி உணவிற்கான செலவு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து அடுத்த வாரத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்வொன்றை எட்டுவதாகவும் இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அது குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.