நாட்டில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவம், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றதாகவும் கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஆனால், நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்கின்றோம் என்று மக்கள் கூறுவதனாலேயே நாட்டை முடக்காது வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கோவிட் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறும்போதே இராணுவத் தளபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நேரத்தில் நாட்டை முடக்குமாறு சிறிய குழுவினரே கூறி வருகின்றனர். ஆனால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் முடக்க வேண்டாம் என்றே கூறுகின்றனர்.
இதனால் பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்தே நாட்டை முடக்காது இருக்கின்றோம்.
இதன்படி மக்கள் தொடர்ந்தும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் நிலைமையைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியுமாக இருக்கும்.
இதனால் சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.