சர்வதேச நாடுகளை போன்றதொரு கற்றல் முறை எமது மாணவர்கள் மத்தியிலும் வேண்டும்.

0

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் திறன்விருத்தி வகுப்பறை மற்றும் விளையாட்டு முற்றம் மாணவர் பாவனைக்கு கையளிக்கப்பட்டது!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கான திறன்விருத்தி வகுப்பறை மற்றும் விளையாட்டு முற்றம் மாணவர் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நேற்று முந்தினம் காலை 8 மணியளவில் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

தமிழ்தேசிய கூட்டமை நாடாளுமன்றஉறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 10 லட்சம் பெறுமதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட விளையாட்டு முற்றம் மற்றம் 5 லட்சம் பெறுமதியில் அமைக்கப்பட்ட திறன் விருத்தி வகுப்பறை ஆகியன பாடசாலை மாணவர் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கையளித்தார்.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சர்வதேச நாடுகள் போன்று இன்று எமது மாவட்டத்திலும் திறன்விருத்தி வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேச நாடுகளை போன்றதொரு கற்றல் முறை எமது மாணவர்கள் மத்தியிலும் கொண்டுவரப்படுகின்றமை வரப்பிரசாதமாக மாணவர்களிற்கு அமைகின்றனர் கிளிநொச்சி மாவட்டத்தில் 170க்கு மேற்பட்ட திறன்விருத்தி வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டக்கச்சி பிரதேசம் திறன் விருத்தி வகுப்பறை வலயமாக உருவெடுத்த வருகின்றது அங்குள்ள பாடசாலைகளில் இவ்வாறான வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் திறன் வகுப்பறைகள் அதிகரிக்கப்பட்டு மாணவர்கள் நவீன கற்றல் முறைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார் அதற்காக என்னால் முடிந்தவற்றையும் செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார்…

பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலைக்கு இவ்வாறான வளங்களை பெற்றுக்கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்தார்…