சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிப்பு

0

2021 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித்திகதி எதிர்வரும் 17 ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நாளையுடன் (10) நிறைவடையவிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிகளுக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் Exam SriLanka எனும் முகவரிக்கோ பிரவேசித்து சாதாரண தர பரீட்சைக்கு Online ஊடாக விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.