சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், 2 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் உயிரிழப்பு – 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!


இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில்,10 பேர் மரணித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதேநேரம், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி 8 மாவட்டங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 45 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி முதலான மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 ஆயிரத்து 528 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 499 பேர் 69 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 612 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 471 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 11 வீடுகள் முழுமையாகவும் 724 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.