சுவையை மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களையும் கொண்ட பப்பாளி! எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

0

பழங்களில் சிறந்த ஒன்றாக கருதப்படும் பப்பாளி சுவைத் தன்மையை மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ் காணப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

பப்பாளியை கனியக் கனிய விட்டமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும்.

நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும். இதனுள் பொதிந்து இருக்கும் மருத்துவத்தன்மை பற்றி பார்போம்.

இரத்தம் உறைதல்

பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.

புற்றுநோய்

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.

இளமையான தோற்றம்

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். * உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

உடல் கழிவு நீக்கம்

இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

நல்ல பாக்டீரியா உற்பத்தி

‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

மனநோய்

மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.கல்லீரலுக்கும் ஏற்றது மற்றும் கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

மாதவிலக்கு பிரச்சனை

சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும். இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.

உடல் குறைவு

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பால் சுரப்பு

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

கண் பார்வை

மூட்டு வலி உள்ளவர்களுக்கும், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும், கண் பார்வையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கும் பப்பாளி நல்லதொரு மருந்துபோல செயல்படும்.