ஜனாதிபதியை பதவி விலகக் கோரும் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஒரு மாதம் பூர்த்தி

0

நாட்டில் வியாபித்துள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறு கோரும் எமது இளம் சந்ததியினர் புதிய தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்கான களமாக கோட்டாகோகம போராட்டக் களத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன்(30)ஆம் திகதியுடன் ஒரு மாதமாகின்றது.

பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மக்கள் மிரிஹானையில் உள்ள ஜனாதிபதியின் இலத்திற்கு அருகே மார்ச் 31 ஆம் திகதி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் இன்றைய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

நேற்று காலை முதல் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.

ரஜரட்ட , யாழ்ப்பாணம் மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் இன்று போராட்டக்களத்திற்கு வருகைதந்து ஆதரவு தெரிவித்தனர்.

இதேவேளை, மெய்வல்லுநர் வீரர்கள் சிலர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்குடன் களுத்துறையிலிருந்து காலி முகத்திடலுக்கு வருகை தந்தனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்திலிருந்து கலைஞர்கள் சிலர் கோட்டாகோகமவிற்கு வருகை தந்திருந்தனர்.