ஜூன் மாதம் பொதுத்தேர்தல்?

0

பொதுத்தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால்  ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜூன் மாதமளவில் பொதுத்தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

அதற்குள் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குளர கொண்டு வர வேண்டும்.

ஜூன் மாதம் பொதுத்தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கல் செல்லுப்படியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆகவே பொதுத்தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் சட்ட ஆலோசனைக்கு உட்படுத்தப்படும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.