கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் சிலருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கொரோனா நோய் கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதார சேவை இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்குள் சிலருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.