தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு

0

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ் கட்சிகள் இணைந்து இந்த ஆவணத்தை தயாரித்தன.

இந்நிலையில் இன்று கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் கோபால் பாக்லேவை சந்தித்த போதே குறித்த ஆவணம் இரா.சம்பந்தனால் கையளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.