திடீரென பயண தடை நீடிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? இராணுவ தளபதி விளக்கம்

0

தற்போது நாட்டில் அமுலிலுள்ள பயண தடை எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக இராணுவ தளபதி நேற்று அறிவித்தார்.

14ஆம் திகதியுடன் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பயணத்தடையை மீண்டும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய விசேட ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் மாற்றப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஜனாதிபதி உரிய தரப்பிற்கு வழங்கிய அவசர ஆலோசனைக்கமைய இந்த தீர்மானங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.

எனினும் பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவையை தடையின்றி நடத்தி செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வார இறுதியில் பயண தடையை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனை மீறும் நபர்களை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.