திருமணம் உள்ளிட்ட சில நிகழ்வுகளுக்கு முழு அளவில் அனுமதி – விசேட அறிவிப்பு வெளியானது!

0

நாட்டில் குறிப்பிட்ட சில சேவைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய திருமண நிகழ்வுகள், உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள், சினிமா அரங்குகள் மற்றும் முகாமைத்துவம் செய்து நடத்தும் நிகழ்வுகளை வழமை போன்று நடத்துவதற்கு நேற்று(புதன்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகள் மற்றும் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.