திலீபனின் உயர் பிரிந்த 10.48 இற்கு சிறப்பு அஞ்சலி!

0

இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம்  திலீபனின் 33ஆம் ஆண்டு நிறைவு இன்றாகும்.

நல்லூர் கந்தன் ஆலய வடக்கு வீதியில் 12 நாட்கள் உணவு தவிர்ப்பிலிருந்த  தியாக தீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது உயிர் பிரிந்த 10.48 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

சாவகச்சேரி சிவன் கோவில் முன்றலில் இடம்பெறும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்திலே இவ்வாறு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நடத்த தமிழர் தாயகத்தில் இம்முறை பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத் தடையும் பொலிஸாரால் பெறப்பட்டது. இந்த நிலையிலே இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டது.