தேர்தல் நடத்துவதற்கான திகதியை பரிசீலனை செய்ய வேண்டும் – அகில விராஜ் காரியவசம்

0

பொதுத்தேர்தல் நடத்துவதற்கான திகதியை பரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர், தன்னாள் இந்த சந்தர்ப்பத்தின் எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியாது என்பதால்தான் தேர்தல் திகதியை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜுன் 2 ஆம் திகதிக்கு முன்னர் அரசமைப்புக்கு இணங்க நாடாளுமன்றை கூட்ட முடியாதுபோனால், இந்த அவசர நிலைமையை உணர்ந்து நாடாளுமன்றை உடனடியாக கூட்ட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாக இருக்கிறது.

அரசமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமையைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்துவதற்கான திகதியை பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் நாம் வலியுறுத்தியுள்ளோம்“ எனக்குறிப்பிட்டுள்ளார்.