தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

0

அனைத்து தொலைத்தொடர்பு தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் வீட்டு நிலையான தோலைபேசி மற்றும் கேபள் டிவி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குமாறு ஜனாதிபதி இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுதெர்ரபாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் ”ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய , கொவிட் 19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தகவல்களை விநியோகிப்பதை முன்னெடுப்பது அத்தியாவசியமான இக்காலக்கட்டத்தில், அனைத்து கொடுப்பனவுகள் நுகர்வோருக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு நிவாரண காலமாக கருதி இந்த சேவையை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்.

முன்னர் செலுத்த வேண்டிய வாடிக்கையாளருக்கான அவசர கடன் வசதி மற்றும் மேலதிக உரைiயாடல் காலத்தை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து டெலிகொம் தொலைபேசி , கையடக்க தொலைபேசி மற்றும் செய்திகளின் நேரடி தொலைபேசிகளைப் போன்று கேபல் ரீவி சேவைகளை வழங்குவோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என .குறிப்பிடப்பட்டுள்ளது.