நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று திறப்பு

0

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படவுள்ளன.

இதன்போது பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய, பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளில் அறையொன்றில் தங்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய எந்தவொரு தடையுமின்றி மாணவர்கள் வழமை போன்று விடுதியில் தங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலம் குறித்த விடுதியின் அறையில் தங்கும் மாணவர்கள் குறிப்பிட்ட வருடத்தை சேர்ந்த மாணவர் குழுவாக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்படுவதோடு, ஏனைய ஆண்டு மாணவர்களை கலப்பாக இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது.

இதேநேரம், விடுதிகளுக்கு வருகை தரும் விருந்தினர்களை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அவ்வாறு வருபவர்களின் பெயர் விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.