நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் – பிவித்துரு ஹெல உறுமய

0

நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமென அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

“இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு” என்ற பெயருக்கு பதிலாக “இலங்கை குடியரசு” என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்பிற்கான யோசனைத் திட்டங்களில் பிவித்துரு ஹெல உறுமய கட்சி இந்த விடயங்களை தெரிவித்துள்ளது.

மேலும் பௌத்த மதத்தை அரசாங்க மதமாக அறிவிக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.

நிறைவேற்று அதிகார முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்க வேண்டுமென மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறைமை உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

13ம் திருத்தச் சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைகள் அமுல்படுத்தும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவி வகிக்கும் கால வரையறைகளை மக்களே நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.