நிரந்தர சமாதானத்தை அடைந்து கொள்வதில் தமிழ் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கும்! -அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர்

0

இலங்கையுடனான தமது வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையாக மனித உரிமைகளே காணப்படுவதாகவும் நிரந்தர சமாதானத்தை அடைந்து கொள்வதற்கான தேடலில் தமிழ் மக்களுக்கான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, இலங்கையிலிருந்து சென்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில்

‘இலங்கையில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுதல் தொடர்பில் கலந்துரையாடும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, மனித உரிமைகளே இலங்கையுடனான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையாகக் காணப்படுகிறது என்பதை உதவிச் செயலாளர் டொனால்ட் லூ கோடிட்டுக் காட்டியுள்ளார்.