பண்டிகைக் காலத்தில் நாடு முடக்கப்படுமா?

0

இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மேலும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்து, பிரதேசங்களை தனிமைப்படுத்தவோ, ஊரடங்கு உத்தரவை அமுலாக்கவோ தேவை ஏற்படாது என கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 51 நாட்களாக முடக்கப்பட்டிருந்த சில வீடமைப்புத் திட்டங்களில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட ஆறு வீடமைப்புத் தொகுதிகள் சார்ந்த பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகிறது.

அந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனை பெறுபேறுகளுக்கு அமைய எதிர்காலத்தில் அவற்றையும் நீக்குவது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.