பரீட்சை ஒன்றிணைந்த செயற்பாட்டு மத்திய நிலையம் ஸ்தாபிப்பு!

0

அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத்  திணைக்களம் என்பன இணைந்து  பரீட்சை ஒன்றிணைந்த செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்துள்ளன.

க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றுக்குத் தோற்றும் மாணவர்களுக்கான வசதிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம், பரீட்சைகள் திணைக்களம், முப்படை மற்றும் பொலிஸார் உள்ளிட்டவர்களுக்கிடையில் தொடர்பாடலை மேம்படுத்தும் வகையில் இந்த செயற்பாட்டு மையம் இயங்கவுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரை இந்த ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையம் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் ஏதேனும் ஒரு விபத்து அல்லது அனர்த்தம் காரணமாக பரீட்சைக்கு தோற்ற முடியாத தடை ஏற்படும் பட்டசத்தில் குறித்த நிலையத்தை அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

117 மற்றும் பரீட்சைத் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றின் ஊடாக 24 மணிநேரமும் அழைப்பை ஏற்படுத்தி தொடர்பு கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், அனர்த்தம் ஒன்றின் போது முகங்கொடுக்க தேவையான வழிகாட்டல்களை இந்த மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.