பிரபாகரனுக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்கவில்லை – தேரர் வெளியிட்ட தகவல்!

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்காமையினாலேயே துன்பத்தை அனுபவிக்கின்றனர் என சஹ்ரான் கூறியதாக கண்டி நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  முன்னிலையாகியபோதே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் 2017ஆம் ஆண்டு நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்திற்கு வந்தபோது, சஹ்ரான் கிறிஸ்தவம் மற்றும் பௌத்த மதம் குறித்தும் அதிலுள்ள விசேட கலாசார விழுமியங்கள் தொடர்பாக விவாதித்ததாகவும் அதன் பின்னர் அவர் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு தலைவர்கள் இல்லை என்று குற்றம் சாட்டியதாகவும் தேரர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை ஆதரவளிக்கவில்லை என சஹ்ரான் தெரிவித்ததாக குறிப்பிட்ட தேரர்,

அவ்வாறு அவர்கள் ஆதரவளித்திருந்தால் பெருந்தோட்ட மக்கள் இன்று பல துன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் என கூறியதாகவும் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.