பிரித்தானியாவில் ஆளுநராக நியமிக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்!

0

கரிபியன் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட தீவான அங்குயேலாவின் புதிய ஆளுநராக இலங்கை வம்சாவளியான தமிழ் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சட்டத்தரணியாக கடமையாற்றி வரும் திலினி டேனியல் செல்வரட்ணம் என்பவரே 2021 ஜனவரியில் இருந்து அந்த தீவின் ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய ஆளுநர் டிம் போயின் இடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அங்குயேலாவின் நிலப்பரப்பு 35 சதுர கிலோமீற்றரைக் கொண்டது. அங்கு 18 ஆயிரத்து 90 பேர் வசிக்கின்றனர்.