பிறக்கும் பிள்ளைகளுக்கு இனி தேசிய அடையாள அட்டை இலக்கம்?

0

சிறுவர் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், குழந்தையொன்று பிறக்கும் போதே, தேசிய அடையாளஅட்டை இலக்கத்தை பெற்றுக்கொடுக்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகியவுடன், அதே இலக்கத்திலான தேசிய அட்டையாள அட்டையை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

உத்தேச புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவிடம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த யோசனையை முன்வைத்துள்ளது.

உத்தேச புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தை தயாரிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய 7 விடயங்களை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.

சுகாதார சேவையை சிறந்த முறையில் முன்னோக்கி கொண்டு செல்வதுடன், நாடு பூராகவும் இந்த சேவையை சமமான முறையில் வழங்குவதற்காக தேசிய சுகாதார கொள்கையொன்றை பின்பற்றுவதற்கான பிரிவொன்றை அனைத்து பகுதிகளிலும் ஸ்தாபிக்கின்றமை தொடர்பிலான யோசனையொன்றையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.