புதிய திரிபு குறித்த ஆபத்தைச் சரியாக அடையாளம் காண வேண்டும்!

0

மதுபானம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள நபர்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசியை வழங்கினாலும் அவர்களுக்கு அந்த வைரஸ் தொற்றும் வாய்ப்புகள் அதிகம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

மதுபானம் மற்றும் புகைப்பிடிக்கும் நபர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எவ்வாறாயினும் மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் என்பன கோவிட் – 19 தடுப்பூசியை வழங்குவதற்கு தடையாக இருக்காது.

மேலும் கோவிட் – 19 வைரஸின் புதிய திரிபு குறித்த ஆபத்தைச் சரியாக அடையாளம் காண வேண்டும் எனவும் அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.