பொதுத் தேர்தல் : வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரம்…

0

2020 பொதுத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், மாவட்ட மட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவான வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரம் வௌியிடப்பட்டுள்ளன.

யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 7 பேர் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கை தமிழரசு கட்சி இம்முறை 03 ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட சார்ல்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட காதர் மஸ்தான் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ரிஷாட் பதியூதீன் ஆகியோரும் பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட குலசிங்கம் திலீபனும் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் வௌியாகியுள்ள விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட எஸ்.எம். தௌபீக், இம்றான் மஹுரூப் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கபில நுவன் அத்துகோரள என்பவரும் இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டவர்களில் இரா. சம்பந்தன் மாத்திரமே அதிக விருப்பு வாக்குகளில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் போட்டியிட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் அதிகூடிய விருப்பு வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் 54,108 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 2 ஆசனங்களையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், கலாமதி பத்மராஜா குறிப்பிட்டுளளார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 07 பேரில் மூவர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்களாவர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட விமலவீர திசாநாயக்க, டீ. வீரசிங்க மற்றும் திலக் ராஜபக்ஸ ஆகியோர் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், மொஹமட் ஹாரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் இந்த கட்சியிலிருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து ஆர்.எம்.எம். முஷாரப், தேசிய காங்கிரஸிலிருந்து ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோரும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் 11 ஆசனங்களை கைப்பற்றிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விருப்பு வாக்குகளின் பட்டியலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையிலுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு 5 இலட்சத்து 364 வாக்குகள் கிடைத்துள்ளன.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, குணபால ரத்னசேகர, தயாசிறி ஜயசேகர, அசங்க நவரத்ன, சமன்பிரிய ஹேரத், டி.பி. ஹேரத், அநுர பிரியதர்ஷன யாபா, ஜயரத்ன ஹேரத், ஷாந்த பண்டார மற்றும் சுமித் உடுதும்பர ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் நால்வர் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நலீன் பண்டார, ஜே.சி. அலவத்துவல, அஷோக் அபேசிங்க மற்றும் துஷார இந்துனில் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ளனர்

கொழும்பு மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய வேட்பாளர்களில், அட்மிரல் சரத் வீரசேகர அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இவரை தவிர, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ, கலாநிதி பந்துல குணவர்தன, மேஜர் பிரதீப் உந்துகொட, தினேஷ் குணவர்தன, மதுர விதானகே, சட்டத்தரணி பிரெமநாத் சி தொலவத்த, காமினி லொக்குகே, சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜகத் குமார ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாச, எஸ்.எம். மரிக்கார், முஜிபூர் ரஹ்மான், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாலக்க கொடஹேவா, பிரசன்ன ரணதுங்க, இந்திக அநுருத்த, சிசிர ஜயகொடி, நிமல் லான்சா, சஹன் பிரதீப் விதான, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளை, பிரியந்த ரணவீர, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, லசந்த அழகியவன்ன, நலீன் ருவன்ஜீவ பெர்னாண்டோ, மிலான் ஜயதிலக்க மற்றும் உபுல் மஹேந்திர ராஜபக்ஸ ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சரத் பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்க, காவிந்த ஜயவர்தன மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய விஜித ஹேரத், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ஜீவன் தொண்டமான், சி.பி. ரத்னாயக்க, எஸ். பி. திசாநாயக்க, மருதுபாண்டி இராமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ ஆகிய ஐவரும் தெரிவாகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன், எம் உதயகுமார் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்குகளுக்கு அமைய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 6 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இதனடிப்படையில், நாமல் ராஜபக்ஸ, டி.வி சன்ன, மஹிந்த அமரவீர, சமல் ராஜபக்ஸ, உபுல் கலப்பத்தி மற்றும் அஜித் ராஜபக்ஸ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சார்பில் களமிறங்கிய திலீப் வெதஆராச்சி இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

விதுர விக்ரமநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, சஞ்சீவ எதிரிமான்ன, பியல் நிஷாந்த டி சில்வா, ஜயந்த சமரவீர அநுப பெஸ்குவல், லலித் எல்லாவல மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் களுத்துறை மாவட்டத்திற்கு ராஜித சேனாரத்ன மற்றும் குமார வெல்கம ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கிய 7 பேர் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

ரமேஷ் பத்திரண, சம்பத் அத்துகோரலகே, மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, சந்திம வீரக்கொடி, இசுறு தொடங்கொட, ஷான் விஜயலால் டி சில்வா மற்றும் கீதா குமாரசிங்க ஆகியோருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்ட கயந்த கருணாதிலக்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட விருப்பு வாக்குகளுக்கு அமைய, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 4 உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இதன் பிரகாரம் ஜனக்க பண்டார தென்னகோன், நாலக்க பண்டார கோட்டேகொட, பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் ரோஹண திசாநாயக்க ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ரோஹினி குமாரி கவிரத்ன பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தெரிவான நால்வரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ரொஷான் ரணசிங்க , சிறிபால கம்லத் மற்றும் ஏ. அத்துகோரள ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் கிங்ஸ் நெல்சன் வெற்றிப்பெற்றுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 6 ஆசனங்கள் பெறப்பட்டுள்ளன.

நிபுண ரணவக்க, கருணா கொடிதுவக்கு, டலஸ் அழகப்பெரும, காஞ்சன விஜேசேகர, மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் புத்திக பத்திரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

திலும் அமுனுகம, மஹிந்தானந்த அளுத்கமகே, லொஹான் ரத்வத்த, அநுராத ஜயரத்ன, கெஹெலிய ரம்புக்வெல்ல, வசந்த யாபா பண்டார, குணதிலக்க ராஜபக்ஸ மற்றும் உதேன சாமிந்த கிரிந்திகொட ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படடுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரவூப் ஹக்கீம், ஹலீம் மொஹமட், வேலுகுமார், லக்‌ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் எஸ். எம். சந்திரசேன, பேராசிரியர் சன்ன ஜயசுமன, உதிக பிரேமரத்ன, ஷெஹான் சேமசிங்க, துமிந்த திசாநாயக்க, ஜே. நந்தசேன மற்றும் கே.பீ. எஸ். குமாரசிறி ஆகிய 7 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இஷாக் ரஹ்மான் மற்றும் ரோஹன விஜேசுந்தர ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கனக ஹேரத், ரஞ்சித் சியம்பலாப்பட்டிய, தாரக்க பாலசூரிய, ரூபிகா விக்ரமசிங்க, H.R.S. துஷ்மந்த, உதயகாந்த குணதிலக்க மற்றும் L.H. சுதத் மஞ்சுள ஆகிய 7 பேர் தெரிவாகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கபீர் ஹாஷிம் மற்றும் கே சுஜித் சஞ்சய பெரேரா வெற்றி பெற்றுள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்குகளுக்கு அமைய, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஷஷீந்த்ர ராஜபக்ஸ, குமாரசிறி ரத்னாயக்க, விஜித பேருகொட, ஜகத் புஷ்பகுமார மற்றும் கயாஷான் நவநந்த ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சார்பில் மொனராகலை மாவட்டத்தில் எச் எம் தர்மசேன விஜேசிங்க வெற்றி பெற்றார்.

புத்தளம் மாவட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 05 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட சனத் நிஷாந்த, பிரியங்கர ஜயரத்ன, அருந்திக பெர்னாண்டோ, சிந்தக அமல் மாயாதுன்ன மற்றும் அசோக் பிரியந்த ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரண்டு ஆசனங்களுக்காக ஹெக்டர் அப்புஹாமி மற்றும் நிரோஷன் பெரேரா ஆகியோர் இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

முஸ்லிம் தேசியக் கூட்டணியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட ஷாப்தி மொஹமட் ரய்ம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் வௌியாகியுள்ள விருப்பு வாக்குகளின் பிரகாரம் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 06 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

நிமல் சிறிபால டி சில்வா, சுதர்ஷன தெனிபிட்டிய, தேனுக விதான கமகே, சாமர சம்பத் தசநாயக்க, டிலான் பெரேரா மற்றும் திஸ்ஸ குட்டியாரச்சி ஆகியோர் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து வடிவேல் சுரேஷ், அருணாச்சலம் அரவிந்தகுமார் மற்றும் சமிந்த விஜயசிறி ஆகியோர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.