மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேசியப்பட்டியலில் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம்

0

தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற எவரையும்  தேசிய பட்டியலில் பாராளுமன்றத்துக்கு நியமிக்கக்கூடாது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை அவ்வாறு நியமிப்பது மக்கள் ஆணைக்கு விராேதமானதாகும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்டபாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பளார் ரோஹண ஹெட்டிஆரச்சி விடுத்துள்ள அறிக்கையொன்றிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்களின் பெரும்பான்மையோரின் விருப்பு வாக்குகளால் மக்கள் பிரதிநிதிகளாக ஒரு பிரிவினர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஒருசில மாவட்டங்களில் பிரபல வேட்பாளர்கள் பலர் தோல்வியடைந்திருக்கின்றனர். இவர்கள் தொடர்பில் மக்களின் விரும்பமின்மை இதன் மூலம் தெளிவாகின்றது.

பாராளுமன்றத்துக்கு பொருத்தமில்லாதவர்கள் என மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேசியப்பட்டியலில் சந்தர்ப்பம் வழங்குவது, இந்த நாட்டு அரசியலில் காணக்கூடியதாக இருக்கும்  சம்பிரதாயமாகும். இது முற்றாக ஜனநாயக விராேத செயலாகும்.

மக்கள் ஆணை கிடைக்கப்பெற்ற வேட்பாளர்களுக்கு மத்தியில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை தேசிய பட்டியல் மூலம் மீண்டும்  நியமிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும்  தலைவர்கள் மக்களின் கோபத்துக்கு ஆளாகுவார்கள்.

அத்துடன் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை அவ்வாறு நியமிப்பது மக்கள் ஆணைக்கும் விராேதமானதாகும்.