மக்களின் நலன்களுக்கான தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளோம் – சவேந்திர சில்வா

0

முறையாக திட்டமிடப்பட்டுள்ள செயற்திட்டங்கள் காரணமாக நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவலை இயன்றளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளது என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “முறையாக திட்டமிடப்பட்டுள்ள செயற்திட்டங்கள் காரணமாக நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவலை இயன்றளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

இது வரையில் முப்படையினரால் செயற்படுத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிக்பு நிலையங்களில் மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதும் 1300 இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய மக்களின் நலன்களுக்கான இராணுவத்தினர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.