மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு!

0

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று(வியாழக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனமே மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.

நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட 445 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நேற்று மாலை வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ரி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.