மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் ஆடுகளை திருடிய கும்பல் கைது!

0

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் வீதிகளில் உள்ள ஆடுகளை நீண்டகாலமாக முச்சக்கரவண்டி ஒன்றில் திருடிவந்த கும்பலைச் சோந்த இருவரை நேற்று (புதன்கிழமை) கைது செய்ததுடன் 14 ஆடுகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தி வந்த முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

திராய்மடு பிரதேசத்தில் மேச்சலில் ஈடுபட்ட ஆடு ஒன்றை காணமால் போயுள்ளதையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி  சப் இன்பெக்டர்  எம்.பிரதீப் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுவந்தனா.

இதன்போது  சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றில் ஆடுகளை திருடி எடுத்துச் செல்வதாக தெரியவந்ததையடுத்து சம்பவதினமான நேற்று பகல் ஆடுகளை திருடிச் சென்ற முச்சக்கரவண்டி மட்டக்களப்பு தாண்டவன்வெளி பகுதி வீதியால் பிரயாணிப்பதாக  பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைத்ததையடுத்து பொலிசார் உடனடியாக குறித்த முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்து அதனை பார்வீதியில் வைத்து முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றவரை மடக்கிபிடித்து கைது செய்து விசாணை மேற்கொண்டனர்.

இதன்போது கைது செய்யபபடடவர் வழங்கிய தகவலுக்கமைய ஆடுகளை திருடி விற்பனை செய்துவரும் கும்பலுடன் தொடர்புடைய தியாய்மடு சேர்ந்த 40 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட பிரதான சூத்திரதாரியான திராய்மடுவைச் சேர்ந்தவரும் வவுணதீவில் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் முச்சக்கரவண்டி செலுத்திவரும்  25 வயதுடையவர் எனவும் இவருடன் அந்த பகுதியைச் சேர்ந்த  சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த 3 மாதங்களாக இந்த ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்துள்ளதாகவும்.

அந்த பகுதியில்  வெற்றுகாணிகள் மற்றும் வீதி ஓரங்களில் புல் மேய்ந்து வரும் ஆடுகளை ஆடுமேய்ப்பர்கள் மதிய உணவுக்கு ஆடுகளை அங்கு விட்டுவிட்டு  செல்லும் போது அந்த ஆடுகளை திருடி முச்சக்கரவண்டியில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்து வந்துள்ளதாகவும்.

இதில் புதூரில் ஒருவருக்கு 3 ஆடுகளும், வவுணதீவு கரடிப்புபூவல் ஆட்டுபட்டியில் ஒருவருக்கு 6 ஆடுகளும், மட்டக்களப்பு லேக்வீதி சந்தியில் உள்ள ஒருவருக்கு  5 ஆடுகள் உட்பட 14 ஆடுகளை திருடி முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து திருடி விற்பனை செய்த 14 ஆடுகளை மீட்டதுடன் முச்சக்கரவண்டி ஒன்று உட்பட இருவரை கைது செய்துள்ளதாகவும் இதனுடன் தொடர்புபட்டுள்ள 4 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும். ஆடுகள் திருட்டுப்போயுள்ளதாக 10 பேர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் தமது ஆடுகளை அடையாளம் காட்டியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.